பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயகாந்தன் - “ஜெயபேரிகை”

imitation" smišlács)

சிலையாம்!

so

றிவுலக மேதை அறிஞர் அண்ணா அவர்களுக்கு சென்னை மவுண்ட் ரோடில், அதாவது அண்ணா சாலையில், திருஉருவச் சிலை ஒன்று திறக்கப்பட்டது.

அந்த சிலை, புரட்சி நடிகர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன், எம்.எல்.ஏ., அவர்களது சொந்த செலவிலே அமைக்கப்பட்டது. நிறுவப்பட்ட சிலையைக் கேலி செய்யும் நிலையில், 'ஜெய பேரிகை’ என்ற நாளேட்டின் ஆசிரியரான திரு.ஜெயகாந்தன் அவர்கள், 10.12.1967ஆம் நாளன்று தனது நாளேட்டில், அறிஞர் அண்ணா அவர்களை விமரிசனம் செய்துள்ள கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'அறிஞர் அண்ணா அவர்களுக்கு சிலை ஏன்?' என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை அது!

சிலை வைக்கின்ற அளவிற்கு அவர் தகுதியற்றவர் என்ற மன அரிப்பு - அக்கட்டுரை எழுத்துக்களிலே ஊறல் எடுத்துக் கொண்டிருந்தது!

கட்டுரையிலுள்ள மனப்புண் மணக்கும் துர்மன வினாக்களில் சில இவை!