பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? 'கம்பரசம்’ என்ற விமர்சன நூல் வெளிவந்ததன் நோக்கம், கம்பர் பெருமானுடைய சொற்சுவைகளை- பொருட் சுவைகளை அணியழகுகளை - கற்பனை நயங்களை நாம் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல.

கம்பர் வாழ்ந்த காலம் - தமிழைக் காட்டிக் கொடுக்கும் பிறமொழி அடிமைகள் காலமல்ல!

தமிழ், தனது அமுதத் திருமுகத்தைத் தரணிக்குக் காட்டிக் காட்சியளித்துக் கொண்டிருந்த நேரம்!

நாடாளும் நாயகர்களே, புரவலர்களாகவும் - புலவர் கனாகவும் இருந்து - தமிழுக்குப் பல்லக்குத் துக்கிய புகழ் பூத்தக் காலம்!

அந்த நேரத்தில், தமிழை, அதன் தனித் தன்மையை இலக்கியத் தேனை - உண்டு உயிர்த்தவர் - கம்பர் பெருமான்! தான்் யாத்த காவிய விருந்திலே, - இறவா இன்பம் தரும் தமிழ்ப் பண்பாடுகளுக்கு ஏற்ப - இலக்கிய அமுதைப் பெய்தவர் - அதுகூட ஆச்சரியம் அன்று!

அத்தகைய கம்பர் பிரானை, அறிஞர் அண்ணா ஏன் விமரிசனம் செய்தார்? இதுதான்் வியப்பு: சிந்திக்க வேண்டிய ஒன்று:

கம்பரசம் எழுதப்பட்டக் காலத்தில், தமிழ் மறையாம் திருக் குறளை அறியாதவர்கள் - மதியாதவர்கள் - தெரியாதவர்கள் ஏராளம்! ஏராளம் பேர்!

முப்பாலுக்குரிய மரியாதையைத் தருவது ஒரு பங்கு என்றால், கம்பருக்கு ஆன்மிகம் என்ற பெயரால் கொடுத்த மரியாதை பன்மடங்குகளாக இருந்தன.

திருவள்ளுவ பெம்மானைவிடக் கம்பர் உயர்ந்தவர் சிறந்தவர் - என்ற வாதமே, எங்கும் தலை தூக்கி இருந்தது - வைணவத்தின் ப்ெயரால்!

இதனாலே, சைவ - வைணவப் போராட்டங்கள் மூண்டிட்ட காரணங்களுள் ஒன்றாகவும் அது அமைந்தது! ஏன் தெரியுமா?