பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

செந்தமிழ்ச் சொல்லின் செல்வர்களான அவ்விருவரையும் அறிவுப் போரில் அறிஞர் அண்ணா சொல்லேருழவராக நின்று "செயங்கொண்டார்!".

அதனால் பரணி பாடியது பகுத்தறிவுப் பாசறை அறிஞர் அண்ணாவின் நா வாகைக் கொடி நாட்டியது!

தமிழ்த் தரணி தடந்தோள் தட்டித் தாண்டவமாடிற்று - துள்ளித் துள்ளி!

இந்தச் சம்பவங்கள் எல்லாம் மெயில் ஏடுக்கும், ஜெய பேரிகைக்கும் புரிய நியாயமில்லை!

அவர்கள், அப்போது பூகோளப் பந்தில் மனிதப் புழுக்களாக ஜென்மம் எடுத்தார்களோ, இல்லையோ - என்னவோ! எவரறிவார் பராபரமே!

அலிகள் இருவரை ஆலிங்கனமாட விட்டு - சிறுகதை இருளிலே அதி வீரராம பாண்டியனின் கலையை முக்கலும் - முனகலுமோடு விளையாட விட்டு - இளைஞர்களுக்கு அலிகள் போதையைக் கற்பித்தவர் அல்லவா - 'படு குழி' என்ற சிறுகதையை வரைந்த திரு.ஜெயகாந்தன்?

ஏதோ ஒரு கூட்டம் சிறுகதைப் பஞ்சத்திற்காகத் தோள் கொடுத்து அவரைத் துக்கி ஆடிய பாவம் - எங்குமுள அறிவை வணங்கி வரவேற்கும் சீரிய பண்பாடில்லாமல், தான்்தோன்றி யாகத் தனது நாளேட்டிலே அண்ணாவின் கட்சி விரோதியை துழைய விட்டு எழுத வைத்துள்ளார் திரு.ஜெயகாந்தன்!

அறிஞர் அண்ணா நாட்டிய இராம காவிய வாத வெற்றிக் கொடியைக் கண்டு, அளவிலா அக மகிழ்வு கொண்டவர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள். அவர் சுதந்திர இந்தியாவிற்கு முதல் நிதியமைச்சராக இருந்தவர்:

8 *

அவர், 'இராமாயணத்தைக் கொளுத்த வேண்டாம், நாளடைவில் - அது மக்கள் மன்றத்தினிடையே உண்மையை உணர்த்தும்” என்று அறிக்கை விடுத்தார்!