பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毒等 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

இம்மியளவு நூற்புலமை இருந்தால், என்னய்யா கூறுகிறீர் மெயிலாரே!

அந்த சமயத்தில், அதாவது 1944-ஆம் ஆண்டில், காந்தி பெருமான் சென்னை மா நகர் வந்தார். இந்தி பிரச்சார சபை ஆண்டு விழாவிலே பேசினார்:

அப்போது அவரிடம், நிருபர்கள், 'தமிழ்நாட்டில் சிலர் இராமாயணத்தை எரிக்க வேண்டும் என்கிறார்களே' - என்று கேள்வி கேட்டார்கள்!

அதற்கு மகாத்மா காந்தியடிகள் என்ன கூறினார் தெரியுமா? 'தான்் வணங்குவது இராமாயணத்திலே வரும் தசரதன் மகனை அல்ல - சீதையின் புருஷனை அல்ல' என்றார்!

உடனே அண்ணா அவர்கள், தனது 'திராவிட நாடு' வார ஏட்டில், ஒரு தலையங்கம் எழுதினார்!

'எரியிட்டார் - என் செய்தீர்?' என்று, கம்ப இராமாயணம் தாங்கிகளைக் குடைந்துக், குடைந்துக் கேட்டார்:

அப்போது ஆமையானவர்கள், இப்போது - அண்ணா சிலை அமையும் நேரத்தில் - விசைவேக முயலாகி விட்டார்கள் - பாவம்!

'மவுண்ட் ரோட்டில், குமரிக்கோட்டம் கண்ட 'கம்பரசக் கர்த்தாவுக்கு சிலையா?' என்று, அழுக்காற்றால் கதைக்கிறார்கள்! புழுதியை வாரித் தூற்றுகிறார்கள்!

ஆங்கில எடான "Madras Mail" இதற்கு ஆலவட்டம் விசுவதைக் கண்டுதான்் நாம் ஆராத் துயருருகின்றோம்! என் செய்வது அது பத்திரிகைச் சாதி அல்லவா?

இந்தப் புழுதி, அண்ணாவின் காலிலே ஒட்டி உதிரும் தூசியைக்கூட அசைக்காது! இவர்கள், கம்பூன்றும் இலக்கியக் குத்துக் கோலர்களே தவிர, வேறு யார்?

"கம்பரசம்”, “ரோமாபுரி ராணிகள்', 'குமரிக்கோட்டம், # 4 - * - - - - .

ஆரிய மாயை' போன்ற புத்தகங்கள் பெயர்களைக் கூறியே அண்ணா சிலையமைப்பு விழாவைத் தடுத்திட நினைக்கிறார்கள் இவர்கள்!