பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 7ל

உலோச்சு என்றால், தனது தலை மயிரைத் தான்ே பிடுங்கி எறிதல் என்று பொருள்! அது சமணக் கொள்கை: மதத்தின் பெயரால் இந்த இலட்சிய வாழ்வை இறுதிவரை வாழ்ந்து இறந்த பெரும் புலவர் உலோச்சனரா நீர்?

தேசியத்திற்காக, இலட்சியத்திற்காக உமது சிகை ஒன்றைக்கூட இழக்காதவர் தான்ே - கவிஞரே நீர்?

அரிசில் கிழார், ஆவூர் கிழார், நல்லாவூர் கிழார், நொச்சி நிலையில் கிழார், கோவூர் கிழார் என்ற வேளாளர்கள் வழி வழி வந்த புலவரா நீர்?

காவிரி பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், பண்ட வாணிகன் இளந்தேவனாரைப் போல நீர் என்ன வணிகர் குலம் வழி வழி வந்த புலவர் பெருமானா

பாவை பாடிய சேர மா மன்னன் பெருங்கடுங்கோவா? இல்லையென்றால் கோப்பெருஞ் சோழனா?

ஒல்லையூர் தந்த பூத பாண்டியனா? இல்லை, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனா? அல்லது ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனா?

இவர்கள் எல்லாம் புலமையால் புகழ் பெற்ற மாமன்னர் களாயிற்றே! அந்த அரசர்கள் வழி வந்த பெரும் புலவர் நீர், என்ற நினைப்பா?

ஏணிச்சேரி முடமோசியாரா? மதுரைக் கணக்காயரா?அல்லது, அவரது மகன் - நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று முக்கண் பெருமானையே எதிர்த்து அஞ்சாமல் அறிவுப் போராற்றிட்ட பெரும் புலமையாளர் நக்கீரனாரா?

புலவரேறு பெரும் கெளசிகனாரா? கடியலூர் உருத்திரங் கண்ணனாரா? ஞானச் செருக்கேறிய கோதமனாரா? - இல்லை, குறிஞ்சிக் கவி வித்தகராக விளங்கும் கபிலரா? புலமைப் புலி வேம்பத்துர் குமரனா?