பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்0136

முதல் இரண்டு கவிதைத் தொகுப்பையும் தூய்மையற்றவை என்று அவரே ஒதுக்கி விடுகிறார்.

‘நான் பெரியவன்; எண்ணற்றவற்றை உள்ளடக்கியவன்’ (I am large: I contain multitudes) என்ற விட்மனின் வரிகளுக்கு மிகப் பொருத்தமான எடுத்துக் காட்டாக விளங்கிய கவிஞர் பாப்லோ நெருடா.

தாம் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத் தம் தல்லறைப்பாட்டை (epitaph) ‘ஒளியின் ஜீவன்’ (Animal of Light) என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அப்பாடல்:

இன்று-
தான் இழந்த அந்தக்
காட்டின் ஆழத்தில்
அவன்-
எதிரிகளின்
காலடிச் சத்தத்தைக் கேட்கிறான்.

அவன்-
மற்றவர்களிடமிருந்து
ஓடவில்லை.
தன்னிடமிருந்து,
ஓயாத தன் பேச்சிலிருந்து
எப்போதும்-
தன்னைச் சூழ்ந்திருந்த
பாடற் குழுவிலிருந்து
வாழ்க்கையின்
உண்மையிலிருந்து
ஓடுகிறான்.

ஏனென்றால்
இம்முறை
இந்த ஒரேமுறை
ஓர் அசை
அல்லது
ஓர் மௌனத்தின் இடைவேளை
அல்லது
கட்டவிழ்க்கப்பட்ட அலையோசை
என் முகத்துக்கு நேராக
உண்மையை
வீசிவிட்டுச் செல்கிறது.

இனிமேல்
ஒன்றும் சொல்வதற்கில்லை
அவ்வளவு தான்!
காட்டின் கதவுகள்