உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

புகழ் மாலை

பாண்டித்துரைத் தேவர்
(1867 – 1911)


“ஆயிரத்தெண் ணுற்றறுபத்தேழாம் ஆண்டில்
          அவதரித்த தேவர் யார் ?” “தெரியா தையா”
“தூயதுதி மஞ்சரிநூல் சைவம் சார்ந்த
          துதிநூற்கள் தொகைத்திரட்டுப் போன்ற நூற்கள்
நாயகியின் தேன்முத்த வண்ணப் பாடல்
          நாட்டுக்குத் தந்தார்யார் ?” “தெரியா தையா !”
“தீயசெயல் செய்யாத பொன்னு சாமித்
         தேவரவர் புதல்வர்யார்?” “தெரியா தையா !”

“அப்பாவி ! செந்தமிழ்க்குத் தொண்டு செய்த
         அறிஞரைநீ அறிந்து கொள்ளா திருக்கின் றாயே !
துப்பாய வானமழை வள்ளல் பாண்டித்
         துரைத்தேவர் எனுமறிஞர் அவர்தான் தம்பி !
இப்போதோர் தமிழ்ச் சங்கம் மதுரை மண்ணில்
         இருப்பதற்குக் காரணமே அவர்தான் தம்பி !
எப்போதும் மறவாதே அவரை ! நீபோய்
         எங்குமுள தமிழர்க்கும் இதனைக் கூறு !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/14&oldid=1871706" இலிருந்து மீள்விக்கப்பட்டது