உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

11


பாடினார் கோவை தூது
            பாடினார்; கலம்ப கங்கள்
பாடினார்; உலாநூல் ஒன்று
           பாடினார்; நரிவி விருத்தம்
பாடினார்; மருதப் பாட்டுப்
           பாடினார்; சிவபுராணம்
பாடினார் நற்றி ணைக்கோர்
           பழுதிலா உரையும் கண்டார்.

நாவணி தமிழ்ச்சொல் லோசை
           நயத்தொடு பாடஞ் சொல்லிப்
பாவணி நயங்க ளோடு
           பாடிய பின்னத் தூரார்
பூவணி மடந்தை மாதர்
           புலவரைக் கலங்க விட்டே
ஆவணித் திங்கள் தோன்றி
           ஆடியில் மறைந்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/13&oldid=1871705" இலிருந்து மீள்விக்கப்பட்டது