பக்கம்:புகழ்மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

புகழ் மாலை


பின்னத்துர் நாராயணசாமி ஐயர்

(1862 – 1934)


சுவை தூங்கும் கரும்பைத் தின்று
         சவைபார்க்க விரும்பி டாமல்
புவிபோற்றும் தமிழிலுள்ள
         புதுச்சுவை உண்டு வந்த
கவிவேந்தர் பின்னத் தூரார்
         கற்பவை கற்ற மேதை.
அவதானி யாரின் மைந்தர்
        ஆராய்ந்த கல்வி யாளர்.

தனியாற்றல் பெற்றி ருந்த
        தமிழ்மொழி ஐய ருக்கோ
நினைவாற்றல் அதிகம் - அன்னார்
       நெஞ்சத்தில் சாதி பேத
இனவேற்றுமைகள் வந்தே
       இடித்திட வில்லை. தீய
மனவேற்றுமை மைக்கும் அன்னார்
       வழிவைத்து வாழ்ந்தா ரில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/12&oldid=1491640" இலிருந்து மீள்விக்கப்பட்டது