உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

9

பாஸ்கர சேதுபதி
(19 ஆம் நூற்றாண்டு)
(ஒயிற்கும்மி)


ஆற்றல் மிக்கவர் ஆட்சி புரிந்தவர்
            ஆஸ்திக நீதிபதி – அவரே
             பாஸ்கர சேதுபதி – புலவர்
போற்றுந்தொல் காப்பியப் புத்தகம் போன்றவர்
             போனபின் ஏதுகதி ?

நற்றமிழ் கற்றவர் நன்மை புரிந்தவர்
             நாதச் சுவையரசர் – இராம
             நாத புரத்தரசர் – கவிதைப்
பற்றினைப் பற்றாகப் பற்றியொப் பற்ற நூல்
             பாடிய பாட்டரசர் !

கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்தவர்
            கேள்வி நக்கீரரவர் – சிறந்த
            வாள்வினை வீரரவர் – இளையான்
பிள்ளை எனுங்கவி ராயரைப் போன்றவர்
             பேருப காரியவர் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/11&oldid=1871702" இலிருந்து மீள்விக்கப்பட்டது