உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

புகழ் மாலை


சைவத்தை மறந்தா ரில்லை
            சமணத்தை மறுத்தா ரில்லை
தெய்வத்தைப் பழித்தா ரில்லை
            செழித்தசெந் தமிழன் மீது
கைவைக்க முயன்றார் தம்மைக்
             கண்டிக்க மறந்தா ரில்லை
பொய்வைத்த சாதி பேதப்
             புரட்டினை ஏற்றா ரில்லை !

பழத்தினில் இனிமை வைத்தான்
              படைத்தவன்; படித்த மேதை
எழுத்தினில் இனிமை வைத்தார்;
            எண்ணத்தை விருந்து வைத்தார்;
விழிப்பினில் வீரம் வைத்தார்;
            வெற்றியில் வேகம் வைத்தார்;
உழைப்பினில் ஊக்கம் வைத்தார்;
            உலகுக்கே தம்மை வைத்தார் !

நிலாமுளை போலும் அந்தி
            நிழல்போலும் வளரும் நட்பை
உலாவிடும் உலகில் காட்டி
            உயர்ந்தவர்; நெருப்புக் கோபம்
இலாதவர்; ஊஞ்சல் நெஞ்சம்
            இலாதவர், பதவி ஆசை
இலாதவர்; செத்தும் சாவே
            இலாதவர் சேக்கி ழார்போல் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/22&oldid=1871714" இலிருந்து மீள்விக்கப்பட்டது