உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

19

திரு.வி.க.
(1883 – 1951)


எழுத்தினால் இனிய பேச்சால்
            இடைவிடாத் தூய தொண்டால்
பழுத்தபே ரறிவால் கல்விப்
            பார்வையால் நட்பால் நாட்டை
இழுத்தவர்; என்தாய் போலே
            இளைத்தவர்; கீர்த்தி சேர்த்துச்
செழித்தவர்; விழித்த தென்றல்
            திரு.வி.க. என்னும் மேதை !

அன்புக்குத் தூதர்; நீதி
            ஔவையார்; மெல்லி னத்தின்
முன்னிற்கும் வல்லி னம்போல்
            முன்னின்ற தலைவர் ! நாட்டின்
நன்மைக்குப் பாடு பட்ட
             நாவலர்! தலைமை தாங்கும்
கன்னிசெந் தமிழைக் காத்த
             காவலர் ! கல்விச் செல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/21&oldid=1871713" இலிருந்து மீள்விக்கப்பட்டது