பக்கம்:புகழ் மாலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

தஞ்சமடை கின்றவர்க்கு ஞானத்தைச்

சொல்கின்ருன்; சார்ந்தி றைஞ்சிக்

கொஞ்சுகின்ற மொழியுடையான் ராமசுரத்

குமார்பாலே கூடு வீரே. :

ஆருகும் சமயமெலாம் சொல்கின்ற

கடவுள் ஒன்றே, அவர்கள் எல்லாம் வேருவார் இலர் என்ற சமரசத்தை

எந்நாளும் விளக்கிப் போற்றும் பேருளன். தனக்கண்டார் தமக்கெல்லாம்

வரமுதவும் பெற்றி யாளன், நாருத மலரனையான் ராமசுரத்

குமாரென்னும் நல்லோன் அம்மா!

ஏழென்னும் பிறவியெலாம் அடியோடே

போக்குகின்ற எம்மான், எங்கும் ஏழென்னும் கடல்கடத்தும் தோணிபோல் நாமிருக்க இயல்பு சொல்வான், - ஏழென்னும் நிலமெல்லாம் கடந்துநிற்கும்

வகையவன்பால் எய்த லாமே; ஏழென்னும் மலைபோல்வான் ராமசுரத்

குமார்பாலே எய்து வீரே. * .

எட்டென்னும் குணமுடைய திருவண்ணு

மலைநாதன் இரண்டு பாதம்

தட்டின்றிப் பணிமின்கள் என்றென்றே

சுற்றியவன் தாளை நித்தம்

கட்டின்றி நினைக்கின்ற பேராளன்

ராமசுரத் குமாராம் காதல்

மட்டின்றி ஓங்குகின்ற பேரருளான்;

அவனடியே வந்து சார்வீர்.

21

33

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/14&oldid=597097" இலிருந்து மீள்விக்கப்பட்டது