பக்கம்:புகழ் மாலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புகழ் மாலை

நவமென்னும் பத்தியெலாம் இவையென்று

நாமறிய நாட்டு கின்ருன்; சிவமென்றும் சக்தியென்றும் முருகனென்றும்

சொல்கின்ற செய்தி எல்லாம். பவம்வெல்லும் ஒன்றனையே சொல்கின்ற

படியென்றே பகர்கின் முனல், தவமொன்றும் ராமசுரத் குமார் என்னும்

பெரியதொரு தவத் தோன் கண்டீர். 25

பத்தாகும் இந்திரியம் அவையடக்கிப்

பத்தி மிகப் பரிந்து கொண்டு சித்தாகிச் சத்தாகி ஆனந்த

மாகியுள தெய்வம் தன்னை எத்தாலும் நினைந்திருக்க வழிசொல்வான்: தன்னையண்டும் எளியோர்க் கெல்லாம் சத்தாகும் நடைபயிற்றும் ராமசுரத்

குமாரென்னும் தவம்சேர் அண்ணல். 26

எண்ணுலே எண்ணுதற்கோர் அளவுண்டோ?

இவன்புகழை எண்ணி யெண்ணி விண்ணுளும் பெருமையெலாம் மேவிடலாம்

என்றக்கால் விரைந்து சென்றே கண்ணுலே அவனுருவைக் கண்டிரண்டு

செவியாலே காத லோடு நண்ணுநின் றிடும் உரையைக் கேட்பார்கள்

எல்லோரும் நல்லோர் ஆவார். - 27

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பிறவியெலாம் ஒழிப்பதற்கே உபாயம் வேண்டின்

பேணுகின்ற ஐம்பொறியை அடக்கல் வேண்டின் அறவினைகள் செய்வதற்கே ஆற்றல் வேண்டின்

அருள்நிலத்தில் நடையாடும் பான்மை வேண்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/15&oldid=597100" இலிருந்து மீள்விக்கப்பட்டது