பக்கம்:புகழ் மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

"ஞானத் தபோதனரை வாவென், றழைக்கும் மலை அண்ணாமலை என்பதற்கிணங்க, நெடுங் காலமாகத் திருவண்ணாமலையில் பல ஞானிகள் இருந்து வருகிறார்கள். குகை நமசிவாயர், குரு நமசிவாயர், சேஷாத்திரி சுவாமிகள், ர ம ன ம க ரி ஷி, ஈசு வ ர சு வா மி க ள் முதலியவர்கள் அத்தலத்தில் இருந்து அதன் புனிதத்தை மிகுதிப் படுத்தியிருக்கிருர்கள்.

இப்போது யோகி ஸ்ரீ ராம்சுரத்குமார் என்னும் பெரியவர் அங்கே தங்கி வருபவர்களுக்கு அருள் பாலித்து வருகிருர் காவி உடை இல்லை; மொட்டைத் தலை இல்லை. என்றாலும் உண்முக நோக்கமுடைய மகா யோகியாக அவர் விளங்குகிரு.ர். பல அன்பர்கள் வந்து அவரைத் தரிசித்து நலம் பெறுகிறர்கள். அவர் சித் து வி ளே யாட் டு ஒன்றும் செய்வதில்லை. பெரிய உபதேசங்களைச் செய்வதில்லை, ஆலுைம் அவர் முன் அமர்ந்தால் மனம் ஒருமைப் படுகிறது. நேரம் போவது தெரியாமல் அப்படியே உட்கார்ந்திருக்க முடிகிறது. . . . .

அவரைத் தரிசிக்கச் சென்ற பொழுதெல்லாம் வாய் மொழியாகவே பல பாடல்களை எளியேன் பாடுவதுண்டு. அவற்றைப் பதிவு செய்து பிறகு படி யெடுத்துக் கொடுக்க, செப்பம் செய்து புத்தகமாக வெளியிட முடிந்தது. இப்படி மூன்று புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. புகழ். மாலை என்ற இது நான்காவது புத்த கம். எந்த எந்தத் தேதியில் இவை பாடப் பெற்ற ன என்றும் குறித்திருக்கிறேன். இறுதியில் சில பாடல்கள் எழுதியவை, - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/5&oldid=1481058" இலிருந்து மீள்விக்கப்பட்டது