பக்கம்:புகழ் மாலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy

குழந்தைபோல உடம்பு குலுங்கச் சிரிக்கும் அப் பெருமானை அணுகி வணங்குபவர்கள் சிறிது நேரமாவது மனம் ஒருமித்து அமர்ந்து விடுகிறார்கள். உண்மை ஞானிகளின் சந்நிதியில் இப்படி நிகழ்வது இயல்பு.

இந்தப் பாடல்களில் நான் அறிந்த வகையில், சுவாமிகளது கோலத்தையும், இயல்பையும் அதநுபவ நிலையயும், அன்பர்கள் அடையும் இன்பத்தையும் ஒருவாறு சொல்ல முயன்றிருக்கிறேன், முன் வெளியான புத்தகங்களைப் படித்தவர்களில் சிலர் திருவண்ணாமலை சென்று இந்த யோகியைத் தரிசித்து நலம் பெற்றிருக்கிறார்கள். - -

முருகன் திருவருளால் இந்த நான்காவது புத்தகம் வெளியாகிறது. இந்த நூல்களை வெளியிடுவதில் மிக்க ஊக்கம் காட்டும் சகோதரர் சிரஞ்சீவி ஞ | ன கிரி கனே சலுடைய ஆர்வம் எல்லே காண இயலாதது. இவற்றை வெளியிட்டுப் பலரும் பாடி மகிழவேண்டு மென்பது அவர் நோக்கம்.

உணர்ச்சி விஞ்சும்போது பாடல் எழுகிறது. அது எப்போது நிற்குமென்று சொல்ல இயலாது. ஒரே சமயத்தில் அறுபது எழுபது என்று கூடப் பாட முடிகிறது.

இந்தப் பாடல்களைப் பாடக் கேட்டு மகிழ்ந்து ஆசி. கூறுவார் சுவாமிகள். அதைவிட் இவற்றிற்கு வேறு. பயன் என்ன வேண்டும்?

காந்தமல் ، ، ۔ -- ---- ” گا ، حس ،’. . . . -- ۔ اص • . வா. ஜகநாதன تهــا تـه و

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/6&oldid=1481057" இலிருந்து மீள்விக்கப்பட்டது