பக்கம்:புகழ் மாலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 75

வல்லாளன், எல்லார்க்கும் வன்மை காட்டும் - மதியாளன், மனமடக்கும் வன்மையாளன், சொல்லாளன், பொருளாளன், அநுப வத்தின்

தோற்றமெலாம் தன்னகத்தே கொண்ட பெம்மான், மல்லாடும் பொறியடக்கி மோன ஞான -

மாநிலத்தில் உலாவுகின்ற சித்தன் என்று சொல்லாரும் புகழ்படைத்த அருணே மேவும் -

துTயவனும் ராம சுரத் குமார ஞானி. - 26 0

தாய்போல அன்புசெய்தே தந்தை போலச்

சன்மார்க்க நெறிகாட்டிக் குருவே போல வாய்கின்ற உபதேசம் பலசெய் வானே

மலர்கின்ற முகத்தருளே கொழிக்கின் முனைச் சேய்நின்ற தெனவேதான் சிரிக்கின் முனைச்

செம்மையெனும் பொருளதனை உணர்த்து வானைப் பாய் புகழ்சேர் அருணே நகர் தன்னில் கண்டே.

பரன்ராம சுரத்குமார் என்பீர் அங்கே. 26. I

தூய்மையெலாம் நீராலே வருமென் றெண்ணித்

தொல்லுலகில் நதிகள் எல்லாம் சென்றே ஆடித் தோய்கின்றீர்; என்ருலும் உள்ளத் துள்ளே

துணிகின்ற வாய்மையன்றே சுத்த மாகும்? பாய்கின்ற மனம் அடக்கிச் சிந்தைக் குள்ளே

பரமனவன் திருப்பாதம் பதித்து விட்டால் ஒய்கின்ற மனத்தினிலே இன்பம் காணும் - ஒன்று வரும்; ராமசுரத் குமார்பால் சேர்மின். 262

கண்னலே கண்டதெல்லாம் பொய்யாய்ப் போகும்:

காசினியில் வாழ்கின்ற வாழ்வை நம்பித்

திண்ணுரும் மனம் சிதறிச் சேரும் போது,

செய்கின்ற செயல் எல்லாம் தோல்வி ஆகும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/82&oldid=597188" இலிருந்து மீள்விக்கப்பட்டது