பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 5

உற்சாகம் காட்ட ஆரம்பித்து, அந்த அல்ப வரும்படி மாதத்தின் முதல் வாரத்திலேயே கரைந்துபோக, மீதமுள்ள நாட்களை எப்படி ஒட்டுவது என்ற கவலையை நித்தம் நெஞ்சில் பயிராக்கி’, கடன் என்கிற சகாய மார்க்கத்தைத் தேடி அலையும் எத்தனை எத்தனையோ ஆசாமிகளில் அவனும் ஒருவனாக விளங்கினான்.

மனக்கவலைக்குமாற்று செக்ஸ் ஈடுபாடுகள் மிகுதியாக உடைய சினிமாப் படங்களைப் பார்ப்பது தான் என்பதை நடைமுறை மருந்தாகக் கொண்டு விடும் பலரைப் போலவே அனந்தசாமியும் செயல் புரிந்தான். வரவர, படத்துக்குக் கொட்டிக்கொடுக்க வேண்டிய பணத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்ட காரத்தினாலே அவன் காசுசெலவில்லாத பொழுது போக்குகளில் ஈடுபட்டான். அவைதான் எத்தனையோ இருக்கின்றன்வே!

வீதி வழியே அழகு நடை போடுகின்ற நாகரிக சுந்தரிகளைப் பார்த்து ரசித்து, ‘இவளும் அவளும் நம்மீது ஆசைகொண்டுவிட்டாள் என்று மனசை நினைவெனும் ஐஸ் கிரீமில் போட்டுக் குளிப்பாட்டுவது முதல், கடலோ ரத்தில் காத்திருப்பது ஈறாக, சேதாரம் இல்லாத செலவும் இல்லாத - பொழுதுபோக்குகளில் அவன் உற்சாகம் காட்டி வந்தான்.

இந்தரகமான ஆசாமிகளுக்கு திடீர்பக்தி தோன்றுவது இயல்பு. கோயில்களுக்குப் போவார்கள். ‘முருகா முருகா என்று புலம்புவார்கள். திருத்தணி, பழனி, திருச்செந்தூர் என்று திரிவார்கள். கையில் பவன்ஸ் ஜர்னலையோ, ‘பரமஹம்சர் அருள்வாக்கு’, கீதைப் பேருரை போன்ற எதையோ சுமந்து செல்வார்கள். கிருபானந்த வாரியார் போன்றவர்களின் கதா காலட்சேபங்கள் எங்கே நடந்தாலும் தேடிப் போய், ஆரம்பம் முதல் கடைசி வரை இருந்து கேட்டு,