பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 5

‘நம்ம வீட்டிலேயும் கொஞ்சநாள் இருந்துட்டுப் போகட்டுமே! இப்ப என்ன கெட்டுப் போச்சாம்? என்று அவள் கணவன் சிதம்பர்ம சொல்லி வைத்தான். பிறகு, ஏன்டா சொன்னோம் என்றாகிவிட்டது அவனுக்கு.

வீட்டுக்காரி பிடிபிடி என்று பிடித்து விளாசி விட்டாள். பேச்சினால்தான்.

‘உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. கையிலே பசை இருக்கிற வரைக்கும் மகள் அப்பா அப்பான்னு கொஞ்சினா. இருக்கதையெல்லாம் கறந்தாச்சு, இனி பத்துறதுக்கு ஒண்ணு மில்லேன்னு தெரிஞ்சதும் ஆளையே வெளியே பத்திட்டா. சாப்பாடு போடது, வெந்நி தண்ணி அது இதுன்னு தேவை களைக் கவனிக்கிறது, இப்படி எவ்வளவோ செலவுகள் நம்ம தலைமேலே விழுந்திடுமேன்னு பயந்துட்டா அவ. அதும் போக இந்தக் கிழம் எந்தச் சமயம் வாயைப் பிளந்து வைக் குமோ யாருகண்டா? அப்புறம் சாவு செலவு நம்மைப் பொறுத்திடுமேன்னு பயம் வேற. அதனாலே மகளும் மருமகனும் நைஸா இவரை மகன் வீட்டுக்கு அனுப்பிவைச் சுட்டாங்க. பெரிய மகள் வீட்டிலே கிழத்துக்கு எப்படியாப் பட்ட வரவேற்பு இருக்கும் தெரியாதா? உங்க மதினி லேசுப் பட்டவளா? அவளும் பயந்துபோயி இவரை வெளியேத் திட்டா. போக்கத்தவங்க நாமதானே. கிழம் இங்கே வந்து பலமா டேராப் போட்டாச்சு. இனிமே மண்டையைப்போட வேண்டியதுதான் பாக்கி. நாம மட்டும் பணத்தை பொட் டணம் கட்டி வச்சிருக்கமா? நம்ம வீட்டிலே பொன்னும் பொருளும் மூலைக்கு மூலை குவிஞ்சுகிடக்கா? நம்மளுக்கே காணமாட்டேங்குது. இந்தக் கிழத்துக்கு பாலு, ஆரஞ்சிப் பழம், சவ்வரிசிக் கஞ்சி, பார்லிக்கஞ்சி, லொட்டு லொசுக் குன்னு வேளாவேளைக்கு மணி தவறாமல் பார்த்துப் பார்த்துக் கொடுக்க யாரோலே ஆகும் ? எப்படிக் கட்டுபடியாகும்? கிழம் சீக்கிரமே செத்தாப் பரவால்லே.