பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 55

பலவீனத்திலும் அதிகமான குளிரினாலும் நோஞ்ச உடம்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. வாய் கோணி, முகத்தின் ஒரு பகுதி விகாரமாக இழுப்புண்டது; நாக்கும் பேச முடியாதபடி பாதிக்கப்பட்டிருந்தது. சிதம்பரத்துக்குப் பழக்கமான நாட்டு வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். ‘இது ஒருவிதப் பக்கவாத நோய். குணமாகிறது கஷ்டம் தான். அவருக்கு வயசும் ஆச்சு; தேகத்திலும் பலம் இல்லை. எதுக்கும் இந்த மருந்தைக் கொடுத்துப் பார்ப்போம். தொடர்ந்து ரொம்ப நாள் சாப்பிட வேண்டியிருக்கும் என்று சொன்னார். ஏதோ மருந்தைக் கொடுத்தார். ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு போனார். அப்புறம் அவர் வரவில்லை. சிதம்பரம் அவரை அழைக்கவுமில்லை. அழைத்து வர வேண்டாம் என்று அன்னமிடும் மணிக்கரம் ஆணை காட்டி விட்டது.

மீனாட்சி தீவிரமான திட்டம். அதை செயல் புரியவும் துணிந்தாள். சிதம்பரம் அவளுக்கு உதவ வேண்டியது அவசியமாயிற்று.

இரவு பத்து மணி இருக்கும். பிள்ளைகள் படுத்துத் தூங்கி விட்டன. வெளியே குளிர் காற்று ஊளையிட்டுச் சுழன்று கொண்டிருந்தது. மாலையில் சற்று ஒய்ந்திருந்ததுறல் முன்னிரவிலிருந்து சிணுங்க ஆரம்பித்து விட்டது.

மீனாட்சியும் சிதம்பரமும் சேர்ந்து கிழவரைத் தூக்கி வெளித் திண்ணையில் கொண்டு வந்து படுக்க வைத்து விட்டார்கள். தரையில் சாக்கு விரித்து, ஒரே ஒரு படுக்கை விரிப்பை அவர்மீது பரப்பி வைத்தார்கள். அவரது விழிகள் பரிதாபமாகமாய், குறைகூறுவது போலவும் கெஞ்சிகேட்பது போலவும், மகனையும் மருமகளையும்மாறி மாறிப் பார்த் தன. அந்தப் பார்வை மீனாட்சியின் உள்ளத்தைத் தொட வில்லை. அவளது கடுமையான பார்வை சிதம்பரத்தின் மனசை ஒடுக்கிவிட்டது. -