பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 & - புண்ணியம் ஆம் பாவம்போம்:

தரும், உள்ளத்துக்கு இதம் அளிக்கும் என்பதனால் அல்ல. எனக்குப் பரவசமூட்டும் புதிய புதிய உலகங்களுக்குள் புகுவதற்கு உரிய இன்ப வாசலை அது திறந்து விடுகிறது என்பதனால் தான்.

அர்த்தமற்ற, சாரமில்லாத, இயந்திர ரீதியாகிவிட்ட, வறண்ட இந்த வாழ்க்கையைவிட வர்ணமயமானதாகவும், பசுமை நிறைந்ததாகவும், கிளுகிளுப்பு ஊட்டுவதாகவும், புதுமைகள் மிகுந்ததாகவும் இருக்கிறது கனவுலக வாழ்வு. அன்றாடச் சாதாரண வாழ்வைவிடச் சுவைமிகுந்த அற்புத அனுபவங்கள் நிறைந்து காணப்படுகிறது என் கனவு வாழ்க்கை. ஆகா, என்னென்ன புதுமைகள்! எவ்வளவு இனிமைகள்..!

ஒரு பூங்கா. ஒரு மூலையில் பெரிய செடி. அதில் ஒரே ஒரு மொட்டு. பெரியதா. ஒரு இளநீர் அளவு பெரியது. உமது தலை அளவு பெரியது. வெள்ளை வெளேர் என்று. நேரம் ஆக ஆக அதன் நிறம் மாறுகிறது. மாறிக்கொண்டே போகிறது. இதழ்கள் விரியும்பொழுது, அந்தப் பூவின் நிறம் மனோகரமான கண்ணுக்கு இனிய ரோஸ் கலராகி விடுகிறது. ரொம்ப அகலமான பூ. சுகந்த வாசனை ஒன்று பரவுகிறது. நான் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து ஒரு குழந்தை முகம் எட்டிப் பார்க்கிறது. குறுகுறு விழிகள். கபடமில்லாது சிரிக்கும் பிஞ்சு உதடுகள். அது ‘இங்கே வா என்று என்னை அழைக்கிறது. ஒரு கையை நீட்டுகிறது. இதில் என்ன வைத்திருக்கிறேன். தெரியுமா?” என்று கேட்கிறது. தெரியாது. எனக்கு எப்படி தெரியும்? “சும்மா யோாசிச்சுச் சொல்லேன்! நான் எது எதையோ குறிப்பிடுகிறேன். அது குறும்பாகச் சிரித்தபடி தலையை ஆட்டிக்கொண்டே இருக்கிறது. முடிவாக, கையை விரித்து, ஒண்ணுமே இல்லை. நான் உன்னை ஏமாத்திப்போட்டேன். பார்த்தியா என்று சொல்லிச் சிரிக்கிறது. குலுங்கி குலுங்கிச்