பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.


29

வல்லிக்கண்ணன்

உணர்கிறேன். மழையோ என்று பார்த்தால் இல்லை. சிறிது நேரத்தில் புரிகிறது. நீலவானமே இளகி வடிகிறது. அந்த நீலம் ஈயத்தைக் காய்ச்சி, ஊற்றியதுபோல, மணல் வெளி எல்லாம் பரவிப் படிகிறது. பளிரென்று நீலப் பரப்பாகி விடுகிறது சூழ்நிலை. அங்கே போனால் அந்த இடம் கொதிக்கும குழம்புமயமாக இருக்குமா என் மீதும் அந்த நீல உருக்கு விழுந்து படியுமா, அது என்னைப் பொசுக்குமோ, இந்த இடத்திலும் வானம் உருகிக் கொட்டுமோ? இப்படி அநேக சந்தேக அலைகள் என் மனசில். நான் திரும்பி ஓட ஆரம்பிக்கிறேன். நீல உருக்கு ஆறெனப் புரண்டு என் பின்னாலேயே வருகிறது. நான் ஒரு பள்ளத்தில் விழுகிறேன். அந்த நீல அனல் வெள்ளம் வந்து அதனுள் பாய்ந்து என்னையும் மூழ்கடித்துவிடுமே என்ற பய உணர்வு என்னை அலறிக்கொண்டு விழித்தெழச் செய்கிறது.

- விநோதமான குட்டி யானை. அதன் கண்கள் பளிச் பளிச்சென்று மின்னுகின்றன. அது துதிக்கையை ஆட்டிக் கொண்டு என் பக்கம் வருகிறது. முதலில் வேடிக்கை யாகத்தான் இருந்தது. ஆனால் அதன் கண்களில் குரூரம் மின்வெட்டியது. அது என்னைக் கொல்ல வருகிறது என்று எனக்குப் படவும், நான் பயந்து ஒட முயல்கிறேன். கால்கள் நடக்கும் சக்தியை இழந்துவிட்டன. நான் செயல் இழந்து அலறுகிறேன். அந்தக் கொடிய குட்டி யானை, வெறியும் விஷமமும் கலந்த சிரிப்பொளி அதன் வெண்மையான வட்டச் சிறுவிழிகளில் மின் பொறி எனத் தெறிக்க, துதிக்கையை உயர்த்திக்கொண்டு என்னை நெருங்கி விட்டது. உடல் பதற நான் விழிப்புறுகிறேன். -

- ஒரு பெண் என்னை வரவேற்று உபசரிக்கிறாள். காலத்துக்கு ஏற்ற சட்டை நான் அணிந்திருக்கவில்லை என்று சொல்லி, ஒரு புதுச் சட்டை தருகிறாள். வெளிர் நீல நிறத்தில், மினுமினு என்று ஜோராகத்தான் இருக்கிறது. அதை