பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஆம் பாவம்போம்!

2

8


வயசிருக்கும். நீ எங்க வீட்டுக்கு வராமல்தானே போறே? உன்னைக் கூப்பிடத்தான் நான் வந்தேன்’ என்றாள். நீ யார், உங்க வீடு எங்கே இருக்கு: எனக்குத் தெரியவே தெரியாதே என்றேன். ‘தெரியும் தெரியும் என்று கூறி, தலையை ஆட்டினாள். ‘வா, இப்பவே வா, இல்லைன்னா வெள்ளம் வந்து உன்னை இழுத்துக் கிட்டுப் போயிரும் என்றாள். வெள்ளமாவது, இப்பவாவது, வாறதாவது! நான் சிரித்தேன். அந்தப் பெண் ஐயோ, வாயேன். சீக்கிரம் வாயேன்!” என்று அவசரத்தோடு கூறி, என்னை கையைப் பிடித்து இழுத்து, கரைமீது கொண்டு சேர்த்தாள். அங்கிருந்த மாமரம் ஒன்றின் மேல் ஏறி, ஒரு கிளையில் உட்கார்ந்து, கவலையற்றுக் கால்களை ஆட்டிக்கொண்டிருந்தாள். ஏதோ ஒருவிதமான ஒசை தொடர்ந்து கேட்டது. ஆற்றின் பக்கம் பார்த்தேன், பெரும் வெள்ளம் முட்டி மோதி முன்னேறி வந்தது. ஆற்றை நிரப்பி, இக் கரைகளையும் தொட்டுத் தடவியவாறு, மதம் பிடித்த யானை போல் வெறிவேகத்தோடு முன்னே முன்னே போய்க் கொண்டிருந்தது. என் உடம்பில் ஒரு சிலிர்ப்பு. என் உள்ளத்தில் பதைபதைப்பு. என்னைக் காப்பாற்றிய அந்தச் சிறுமி யார்? அவளுக்கு இது எப்படித் தெரிந்தது? அவளிடம் கேட்கலாம் என்று துடிப்போடு திரும்பினேன். அங்கே பெண்ணையும் காணவில்லை; யாரையும் காணவில்லை! மீன் கொத்திப் பறவை ஒன்று கவலையில்லாமல், வெள் ளத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.....

- இதைவிட விசித்திரமான, விநோதமான, அபூதமான, அதீதமான கனவு அனுபவங்களும் எனக்கு அவ்வவ்போது ஏற்பட்டது உண்டு. -

- நல்ல வெயில் வேளை. சுட்டெரிக்கிறது. வெயில். தார் ரோடுகளில் தார் இளகி நிற்கிறது. நான் நடக்கிறேன். பரந்த பெருவெளி. வெண் மணல் பரப்பு. சட்டென்று வானத்திலிருந்து நீலம் நீலமாகச் சொட்டுகள் விழுவதை