பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 31

கொண்டு விலகிச்செல்கிறது. பின்னாலேயே மிகப் பெரிய ராட்சஸ்ப் பறவை ஒன்று. கழுகு மாதிரி. அது உற்சாகமாகக் கதறிக்கொண்டு வருகிறது. அதன் கீச்சொலி மிகத் தெளிவாக எங்கும் பாய்கிறது... இந்தச் சத்தம் எல்லாம் இந்த ஊரில் ஒருவரைக்கூட எழுப்பி விடவில்லையே என்ற வியப்பு எனக்கு. அம் மூன்றும் மிகவும் தணிவாகத்தான் பறந்து செல்கின்றன. பறவை தன் கழுத்தை கீழ்நோக்கி நீட்டுகிறது. விகாரமான கழுத்து. ஒரு வீட்டின் மொட்டை மாடிச் சிறு சுவர் மீது தொட்டிகளில் விநோதம் விநோதமான செடிகள். அவற்றிடையே பசலைக் கொடி போன்ற செடி ஒன்று. நெளியும் புழுக்கள் போல. அதை அந்தப் பறவை கவ்வி இழுக்கிறது. வேகமாக இழுக்கிறது. பசியகொடி நீண்டு நீண்டு, தொட்டியை விட்டவிடாது, பறவையின் மூக்கைச் சுற்றியும், கழுத்தைச் சுற்றியும் வளர்ந்து நெளிந்து... அதன் பிடி இறுகியது போலும். பறவை வேதனையோடு அலறியது. அந்த ஒலி வெட்ட வெளியில் வெகு தெளிவாக, உலோகத் தொனியென, சிதறிப் பரவியது. மற்ற இரு மிருகங்களும் அதைக் கவனியாமலே போய் விட்டன. பறவையும் கொடியை அறுத்துக்கொண்டு, அது கழுத்தைச் சுற்றியும் வெறும் வெளியிலும் மஞ்சள் கலந்தோடும் பச்சை நிறம் கொண்ட ஒல்லிய பாம்பெனத் துவள, அலறியபடி பாய்ந்து செல்கிறது. இன்னும் எவரும் விழிக்கக் காணோமே என்று நான் சுற்றுமுற்றும் பார்க்கிறேன்...

- ஆங்காரமாக முட்டி மோதுகிற அலைகள் புரண்டு விழுந்து, பின்வாங்கும் அற்புதத்தை கவனித்தபடிநிற்கிறேன். ஆச்சர்யம்! திடுமென வந்து வீழ்ந்து, நிலந்தடவும் வெண் நுரையாய் வெறும் நீராய் உருண்டு உள்வாங்கிய அலைகள் உள்ளே உள்ளே போயின. கடலே உள்வாங்கியது. நீர் வற்றிக் கொண்டே போகிறது. கடலின் தரை அடிமட்டம், அதன் நானாவிதப்பொருள்களோடு, சிப்பிகளோடு, பூச்சி புழுக் களோடு, பாசிக்கொடிகள் இனம் தெரியாப் பூண்டுகளோடு,