பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o புண்ணியம் ஆம் பாவம்போம்:

3

6


பட்டாடையும் பளபளப்பும் பெற்றிருந்த அந்த இளம்பெண் வறண்ட இடத்துக்குக் குளுமையும், கலரும், கவர்ச்சியும் சேர்த்தாள். அதனால் அவனுக்குச் சிறிது மகிழ்ச்சி

.

இதை எண்ணி அவன் மகிழ்வுற்றிருந்த வேளையில் வந்து சேர்ந்தது ஒரு கும் பல். தெற்குக் கடைசி ஊர் ஒன்றிலிருந்து திருப்பதிக்கு வந்து விட்டு, மறுபடியும் சொந்த ஊருக்குப் பிரயாணமாகும் பெரிய குடும்பம் அது. குடும்பத் தலைவன், தலைவி, மாமியார், அம்மா, குழந்தைகள், பெரிய பெரிய பெட்டிகள், படுக்கைகள், மூட்டை முடிச்சுகள் எல்லாமாகச் சேர்ந்து இடம் முழுவதையும் அடைத்துக் கொண்டு நெருக்கடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டியது. அக்கூட்டம்.

சிறிது நேரம் வரைதான். பிறகு, மணி ஆக ஆக, வண்டி ஒட ஒட, இரவு நேரப் பயணிகள் எப்படி எப்படியோ விழுந்து கிடந்து, துங்குவதில் உற்சாகம் காட்டவது இயல்பு எனும் பொது விதி அங்கும் ஆட்சி புரியலாயிற்று.

அகலமில்லாத பெஞ்சுகளில், கிடைத்த இடத்தில், ஒடுங்கியும் கோணியும் படுத்துக் கிடந்தும், திரும்பியும் ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அப்படித் தூங்குகிற வர்கள் திரும்புகிறபோதும், மீண்டும் மறு பக்கம் பார்த்துப் புரண்டு தூங்குகிற போதும் பெண்களின் பலவிதத்துக்க நிலைத் தோற்றங்களைக் கண்டு ரசிக்கக் கூடிய வாய்ப்பு விழித்துக் கொண்டிருக்கும் பிரயாணியான சிதம்பரத்துக்குக் கிட்டியது.

அதனால்தான் அவன் மனம் பார்வை விஷயமாக எண்ண அலை வீச நேர்ந்தது.

‘மனைவி எனும் ஒருத்தியோடு தனி அறையில் துங்கும் பழக்கமுடைய ஆண் கண்டு களிப்பதைவிட அதிகப் படியான