பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 37

அழகுக் காட்சிகளை, இன்டிரஸ்டிங் போஸ்களை, அன்- - இன்டன்ஷன்ல் வெளிச்சங்களை, அதாவது வேண்டுமென்றே செய்யப்படாத - தன்னினைவற்றுத் தானே நிகழ்ந்து விடுகிற - திரை நீக்கங்களை, விதம் விதமான பெண்களிடம் பார்த்து இன்புறும் பாக்கியம் இரவு நேர ரயிலில் தூங்காது விழித்திருக்கும் வீணனுக்கு வந்து சேர்கிறதே என்று அவன் எண்ணிக் கொண்டான்.

அவன் பார்வை எதிர் பெஞ்சு மீது படிந்தது. கண்களைப் பிடித்திழுத்து அங்கேயே நின்று விடும் படி செய்யும் தோற்றம்தான்.

நீலப்பட்டு உடுத்திய உருவம். எடுப்பான பருவத் திரட்சி களையும் பிடிப்புக்களையும், நெளிவுவளைவுகளையும் பெற்றிருந்த பெண். மினுமினுக்கும் வெண்மை என்றும் சொல்ல முடியாத, மஞ்சள் என்றும் கொள்ள முடியாத, ஆயினும் தாழம்பூ நிறம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்க வைக்கும் நிறத்தைக் கொண்டிருந்த யுவதிபடுத்துக் கிடந்த ஒடுங்கல் தோற்றம் அவனைக் கிறக்கியது. அவள் திரும்பிப் படுத்த கோலமும், முன்புற அழகு காட்டிய நிலையும், ஆழ்துயில் பயின்ற எழில் முகத்து அமைதிக் கொலுவும் காணுந்தோறும் காணுந் தோறும், மீண்டும் மீண்டும் காணவேண்டும் எனும் ஆசையைத் தூண்டும் அற்புத இனிமைகளாகத் திகழ்ந்தன.

சிதம்பரம் மற்றவர்களையும் கவனித்தான்.

அந்தக் குடும் பத்தின் இளம் பெண் அழகியுமல்ல; அலங்காரியும் அல்ல. குரூபியுமல்ல; கோரமும் இல்லை. கண்டு சகிக்கக்கூடிய சராசரிப் பெண். தூங்கும் நிலையில் அவளிடம் ஒரு வசீகரம் சூழ்ந்திருந்தது. சிதம்பரம் இருந்த பெஞ்சில் தான் அவள் தூங்கிக் கிடந்தாள்.