பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53

அவள் கிளப் என்று உச்சரிப்பதற்குள் அவன் இன்ட்ரஸ் டிங்காக ஒரு கிஸ் பதித்து விடுகிறான்.

நிழலும் நிஜமும் ஒரு தியேட்டரின் முகப்பில் வர்ணப் படம் பெரிசாக பளிச்சென வரையப்பட்டுள்ளது. ஒருவன் படுத்திருக்கிறான். அவன் காதலி அவன் கழுத்தைப் பற்றியபடி தன் முகத்தை அவனுடைய முகத்தருகே வைக்கிறாள். -

ஆபாசம் தேடிகள் சுற்றி அலைந்து பார்த்தபோது, இது அவர்கள் பார்வையில் ‘ஆபாசம்’ என்று பட்டுவிட்டது. ஆட்சேபம் கிளப்பி, பெரிய படத்தில் பெண்ணுக்கு பச்சை வர்ணம் பூசி அழிக்கும்படி பண்ணி விட்டார்கள்.

பெரிய விளம்பரத் தட்டி விசித்திரமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இதைக் காண்கிற காமிராப் பார்வை விரைந்து கடல் புறம் மணல் வெளியில் பாய்கிறது. அங்கே சுவாரஸ்யமான காட்சிகள்.

சூழ்நிலை மறந்து தம்மிலே தாமேயாகி இருக்கும் காதல் ஜோடிகள். பல ரகமானவர்கள்.

சாயங்காலம் 5.30 மணிதான். வெளிச்சம் நிறையவே இருக்கிறது.

ஒரு ஜோடி.

நீலப் பட்டாடை அணிந்த, கவர்ச்சி நிறைந்த, இளம் பெண். அவளுக்கேற்ற அன்பன். அவளே துடிப்பாய், முனைப் பாய், ஆர்வமாய், ஆசையாய் செயல் புரிகிறாள். அவனை நெருக்கி இடித்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவன் மேலே சாயகிறாள். முகத்தின் பக்கம் முகம் கொண்டு