பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புண்ணியம் ஆம் பாவம்போம்!

பெரும் கூட்டம். நீளப் பெரும் க்யூ. 1.60 டிக்கட் கிடைக்காது போலிருக்கே என்கிறார் நண்பர். இன்னொரு நாள் தான் வரணும்!

2.50 க்கே போகலாம். வாங்க. அங்கே ஆளே இல்லை!” மிஸ்டர் ராம் ஜம்பமாக ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி, இரண்டு டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டு. நண்பர் தொடர, மிடுக்காக நடந்து உள்ளே போகிறார்.

ரேஷன், அரிசி வகையராக்களின் நினைப்பே அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

திரையும் இருட்டும்

திரையில் ஸெக்ஸியான ஆட்டங்கள். குதிப்புகள் குட்டிகளும் குமரர்களும் குஷி அனுபவிக்கிறார்கள்.

ஒரு சுவரில் கிஸ் கிஸ் கிளப் என்று ஒரு போர்டு பளிச்சிடுகிறது. -

படம் பார்க்கிறவர்களில் சில நாகரிக யுவதிகள் கிளு கிளுத்துச் சிரிப்பது அங்கும் இங்குமாக இருட்டில் தெறித்து விழுகிறது. -

ஒரு ஒரத்தில் இரண்டு பேர். - யுவனும் யுவதியும். ஸ் கூட்டர் ரோமியோ 573g ஜூலியட்டுடன் படம் பார்க்க வந்திருக்கிறான். -

அவள் களுக்கென்று சிரிக்கிறாள். அவன் தோளருகே தலை வருகிறது.

‘என்ன? அவனுக்குக் கிளர்ச்சி.

“இஸ் இல்