பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 & புண்ணியம் ஆம் பாவம்போம்!

யாரு வேண்டாமுங்கா பஸ் சார்ஜ், அலைச்சல், வாங்கி ஸ்டாக் பண்ணி விக்கிறதுக்கு கூலி, இதுகளை எல்லாம் சேர்த்து வச்சுதான் நாங்க விலை நிர்ணயிப்போம்” என்று அவர் பேசுவார்.

“அவர் சொல்வதும் நியாயம் தானே?’ என்று அவருக்குப் பரிந்து பேசவும் ஊரில் ஆட்கள் இருந்தார்கள்.

தேவையான பொருட்கள், தேவைப்படுகிற சமயங் களில் கிராமத்தில் கிடைப்பதில்லை. இது பாலுப்பிள்ளைக் குப்புரிவதற்கு வெகுநாட்கள் தேவைப்படவில்லை.

“எல்லா காலங்களிலும் எந்த நேரத்திலும் பட்டணத்தில் பூ முதல் எல்லாச் சாமான்களும் கிடைக்கின்றன. கையில் பணம் இருக்கவேண்டும். அதுதான் முக்கியம். கிராமத்தில் பணத்தை வச்சுக்கிட்டு சாமான்களுக்காக அலைந்தாலும் கிடைக்கிற வழியாயில்லையே?’ என்று அவர் தன் மனைவியிடம் குறைபட்டுக் கொள்வது வழக்கமாகி விட்டது. -.

முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் செக்கு இருந்தது. அதில் எண்ணெய் ஆட்டுகிற ஒசை ஒருவித இசைத் தன்மையுடன் நாள் முழுதும் கேட்டுக் கொண்டிருக்கும். நயமான நல்லெண்ணெய் உள்ளூரிலேயே கிடைத்தது. இப்போது அப்படி இல்லை. எண்ணெய் வாங்குவதற்கு டவுனுக்குத்தான் போகவேண்டும்.

ஒருநாள் ஏதோ கனமான சாமானை நகர்த்தி வைப்பதற்காக, தெருவோடு போன ஒருவனை அவர் அழைத்தார். முன்புபோல எவனும் சிரித்த முகத்தோடு வந்து அன்புடன் உதவுவான் என்றே அவர் எண்ணியிருந்தார்.

ஆனால், அந்த ஆள் பேசாமலேயே நடந்தான்.