பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 புண்ணியம் ஆம் பாவம்போம்!

இடங்களாகவே அமைந்துள்ளன. தெருக்களின் மத்தியில் சாக்கடை ஒடுகிறது.

பாலுப்பிள்ளை முகம் சுளித்து, மனசுக்குள் புழுங்குவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? காலம் மாறிவிட்டது என்பது சரிதான். அத்துடன் மனிதர்களின் போக்குகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. வறுமையும் சோம்பேறித் தனமும் வளர்வதை அவர் கண்டார்.

கிராமவாசிகளும் நகரமோகம் கொண்டு, நகரமக்களின் உடை அலங்காரங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றத் துடிப்பதையும், அநேகர் நகரங்களிலேயே வசிக்க ஆசைப்படுவதையும் அவர் அறிந்தார்.

வேலை இருக்கிறதோ இல்லையோ, கிராமவாசிகள் பஸ்களில் பயணம் செய்து நகரங்களுக்குப் போகிறார்கள்; அங்கே சுற்றுகிறார்கள்; ஒட்டலில் சாப்பிடுகிறார்கள்; சினிமா பார்க்கிறார்கள். பணக்கஷடம் அது இது என்கிறார்கள். ஆனால் எப்பவும் பஸ்கள், ஒட்டல்கள், சினிமாத் தியேட் டர்களில் கூட்டமும் நெருக்கடியுமாகத்தானே இருக்கிறது? ஜனங்களுக்கு இதுக்கெல்லாம் பணம் கிடைத்துக் கொண்டு தானே இருக்கிறது!’ என்று அவர் அதிசயித்தார்.

பாலுப்பிள்ளைக்கு தபாலில் வந்த பத்திரிகைகளில் ஒன்றில் ஒரு சிறப்புக் கட்டுரை இருந்தது. கிராமங்களின் உயர்வுபற்றி ஒருவர் அளந்திருந்தார்.

‘இந்தியாவின் ஆத்மா அதன் கிராமங்களில்தான் இருக்கிறது என்று கூறி கிராமங்கள், கிராம மக்கள், அவர்களது பண்புகள் பற்றி எல்லாம் உற்சாகமாக எழுதப் பட்டிருந்தது அந்தக் கட்டுரையில்.