பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 95

இரவு ஒளிக் கோலங்களுடன் அற்புதமாக விளங்கியது. சிவப்பு, பச்சை, நீல நிறக் குழல் எழுத்துக்களாய் மினுக்கும் பலரக விளம்பர நியான் விளக்குகள். பிரகாசமான மெர்குரி வேப்பரைஸ்ட் விளக்குகள். நீள நீளமான ப்ளோரசன்ட் விளக்குகள்... ஒளி சிமிட்டிச் சிமிட்டி எரியும் விளம்பர வெளிச்சங்கள்... ஒரு உயர்ந்த கட்டிடத்தின் உச்சியிலே தீ எழுத்துக்கள் ஒடிக்கொண்டே இருப்பதுபோல் ஒளி ஜாலம் காட்டும் செவ்வொளி விளம்பர ஏற்பாடு...

‘ஏய், என்ன வேலைகள் எல்லாம் செய் றானுக எலெக்ட்ரிக் லைட்டினாலே! என்று வியந்து போனான் சோமு.

ஒரு சரக்கின் விளம்பரத்துக்கு அடுத்து இன்னொன்று, அதை அடுத்து வேறொன்று... மற்றுமொன்று... மேலும் வேறே... இப்படி வேகம் வேகமாய் ஒடும் தீ நிற எழுத்துக் களில் அடுத்தடுத்து என்ன வருகிறது, எத்தனை வரும் என்று நின்று கவனித்தான். முதலில் கண்ட விளம்பரமே திரும்ப வந்ததும், தொடர்ச்சியாக பழைய வரிசையே தோன்றவும், “அற்புதம்தான்!” என்று எண்ணியவாறு ரஸ்தாவில் இறங்கினான். பெரிய ரோடைக் கடக்கும்போது கூட, ஒடும் தீ ஒளி எழுத்துக்களை வேடிக் கையாக அண்ணாந்து பார்த்தவாறே நடந்தான். -

அவன் அப்படி நடப்பதைப் பார்க்காத கண்மூடி வேக ஒட்ட மோட்டார் ஒன்று அவனை மோதிக் கீழே தள்ளி அவன் மீது ஏறிக்கொண்டு சென்றது. வெறி வேகத்தில் அதை ஒட்டி வந்த மனிதன் மனிதத் தன்மையோடோ, நாகரிக விதி முறைகளின் படியோ செயல்புரிய விரும்பவில்லை. அவனுக்கு என்ன வெறியோ, என்ன அவசரமோ காரை நிறுத்தாமல், திரும்பிப் பார்க்காமல், வேகமாக, மேலும் வேகமாக - ஒட்டிச்சென்று எங்கோ மறைந்து விட்டான்.