பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் Q96 » கவியரசர் முடியரசன் முழுநிலவே செங்கதிரே காலங் கண்டும் மூவாத தமிழ்ப் பொழிலில் ஆடிவந்த அழகொழுகும் இளமையிலே உலக மாந்தர் ஆவியெலாங் குளிர்விக்குந் தென்றற் காற்றே பழகுதமிழ்க் கனிமூன்றுஞ் சுவைத்துப் பார்த்துப் பாடிவந்த பூங்குயிலே மறைந்தாய் நாங்கள் அழுதழுதும் வாராயோ? மீண்டு மிங்கே ஆடாயோ பாடாயோ? அந்தோ அந்தோ! கண்மூடி வழக்கமெனுங் காட்டில் தோன்றுங் கதைக்குதவாச் சாதிமதம் அடிவே ரற்றும் எண்கோடிப் பழங்கொள்கைச் சருகு சுள்ளி இழிவுதரும் அடிமையெனும் வெம்பல் வீழ்ந்தும் மண்மூடிப் போகவெனச் சாடி வந்த மாவலிமைப் பெரும்புயலே இடிமு ழக்கப் பண்பாடி அணிதிகழும் பாவால் மின்னிப் பழுத்தசுவை பொழிமுகிலே யாண்டுச் சென்றாய்? எவ்விடத்தும் எப்பொழுதும் எவரி டத்தும் எதுவரினும் உண்மையினை எடுத்து ரைக்கும் செவ்வியநற் பெருமிதமும் அஞ்சா நெஞ்சும் சேராரை நடுக்குறுத்துஞ் சீர்த்த நோக்கும் கவ்வுமெழிற் றிண்டோளும் விரிந்த மார்பும் களிறனைய பெருநடையுங் கொண்ட சிங்கம் இவ்வுலகில் எங்கள்மனக் குகையில் வாழும் எழுந்தெழுந்து முழங்கிவரும் எந்த நாளும்