பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் 32 கவியரசர் முடியரசன் இருட்புலத்திற் கவியுலகம் மூழ்குங் காலை எழுவெள்ளி பாரதியாய் வந்த திங்கே மருட்புலத்தை மாய்க்கின்ற ஞாயிறிாக 为 மன்னவனே நீவந்தாய் அவன் பேர் சொல்ல; உருப்பெற்ற கதிர்களென எம்மைப் போல்வார் உள்ளனரே ஆயிரவர் நின்பேர் சொல்ல; செருக்குற்றே மொழிகின்றேன் அய்யமில்லை சிந்தையுளே நீயிருக்க எனக்கேன் அச்சம்? வாழ்நாளிற் கவிஞனுக்கு வாழ்வே யில்லை வையத்துக் குறையென்றே சொல்வர்; அந்தத் தாழ்வுரையைப் பெருங்குறையை மாற்றி விட்ட தகவுனக்கே தலைநகரில் வாய்த்த தையா! வீழ்நாளின் பிற கடையும் பெருமை யெல்லாம் விழியெதிரே கண்டுவந்தாய் வெள்ளம் போல ஆழ்கடலின் கரையருகே தமிழர் கூட்டம் ஆர்ப்புடனே விழவயர்ந்த களிக்கக் கண்டாய். இல்லறத்தைப் பல்கலையின் கழக மாக்க ஈடில்லாக் குடும்பவிளக் கேற்றி வைத்தாய் சொல்லடுத்த தமிழ்வளர்க்கத் தமிழர்க் கெல்லாம் தாய்மைமிகு தமிழியக்கஞ் சொல்லி வைத்தாய் புல்லிதழ்த்தேன் மலர்முதலா இயற்கை யூடு பொருந்தழுகின் சிரிப்பெல்லாந் திரட்டித் தந்தாய் சொல்லிருக்கும் பொருளிருக்கும் அணியிருக்கும் சொற்றமிழில் பாண்டியனின் பரிச ளித்தாய்.