பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் అB கவியரசர் முடியரசின் し】 જન્મ நறுந்தேனும் பசும்பாலும் கலந்து வைத்து நற்கவியாம் முக்கனியை நறுக்கி யிட்ட விருந்தாகும் நீதந்த கவிதை; மேலும் விசையொடிந்த உடலகத்தில் வீரஞ் சேர்க்கும்; பொருந்தாரைச்செவிசாய்த்துப் பொருந்த வைக்கும்; புலவோய்நின் நறுங்கவிதைக் கவிகள் சாவா மருந்தாகும்; செந்தமிழுக் குயிர்ப்பு நல்கும்: s வையைத்துள் என்றென்றும் வாழும் அய்யா எம்பாட்டன் பாரதிக்குத் தாச னானாய் எம்மனைய கவிவாணர்க் கரச னானாய் நம்மாட்சி யவைப்புலவன் நீயே யாகும் * - நாள்.விரைவி லுண்டென்று நம்பி நின்றோம் எம்பாட்டில் அவலத்தைச் சேர்த்து விட்டாய் இரங்குகின்றோம் கண்ணிரைச் சொரிந்து நின்றோம் தெம்பூட்டித் தமிழ்காக்க வழிகள் காட்டு, திறமூட்டு கைநீட்டித் தொழுது நின்றோம் பாரதிக்குத் தானெனப் பாதிரக்கும் # பாவலனே கவிக்குலத்துத் தலைவ ரேறே யாருரைக்க வல்லார் நீ யிறந்தா யென்றே யாமொல்வோம்; பாரதியும் இளங்கோ கம்பன் பேரறிஞன் வள்ளுவனும் இறந்தா போனார்? பெருமையொடு வாழ்கின்றார்; அவர்போல் நீயும் பாருலகில் வாழ்கின்றாய் அய்யா எங்கள் -- பாடலுக்கும் உயிருட்டு வழியுங் காட்டு. © (><>