பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் G103) கவியரசர் முடியரசன் பாடுபட்டுப் பெற்றோர்கள் கல்விக் காகப் பணமனுப்பச் செலவழித்துக் கூடிப் பாடிக் கூடுவிட்ட பறவைஎன ஒடி ஆடிக் கோலங்கள் பலசெய்து, வாங்கி வைத்த ஏடுதொட்டுப் பாராமல், கண்வி ழித்தே எக்களித்துத் திரிவதிலே சிலருக் கின்பம்; நாடுகெட்ட நிலையுணர்ந்து, தமைநி னைந்து நடப்பதற்கு முயல்வதுதான் நிலைத்த இன்பம் நமதுதொழில் பயில்வதெனக் கடமை எண்ணி நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம்வி ளைக்க உமதறிவு செயல், நினைவை ஆக்கல் வேண்டும்; உலகும்மைத் தக்கவரென் றுரைக்கும் வண்ணம் 0ಣ್ಣಲ್ಲ கண்ணியமென் றெண்ணி எண்ணி لوي நொடிப்பொழுதும் வழுவாமல் ஒழுகல் வேண்டும்; குமையாம்ல் சிதையாமல் கட்டுப் பாடும் கொண்டவராய் விளங்குவிரேல் இன்பந் தோன்றும். தொடங்குங்கால் துன்பமெனத் தோன்று மேனும் துளங்காமல் தொடர்ந்திருந்து முயல்வீ ராயின் மடங்கொன்று பேரறிவு வளரக் காண்பீர்; மட்டில்லா இன்பநிலை தொடரக் காண்பீர்; முடங்கியுள நம்நாடு நாளை உங்கள் முகங்களைத்தாம் எதிர்நோக்கும்; அதனால் நெஞ்சில் திடங்கொள்க பயின்றிடுக வெற்றி கொள்க திருநாட்டில் நல்லாட்சி மலரச் செய்க. கருத்தராவுத்த,கல்லூ,உத்தம பாளையம் 27.1.1967