பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் G18) கவியரசர் முடியரசன் வாலைப் பிடித்திழுத்து வம்புசெயும் வானரங்கள், கூவுங் குயிலினங்கள், கோல மயிலினங்கள் யாவும் இருவிழியால் யான்கண்டேன்;கண்டவற்றை ஒவியம்போல் ஒப்பற்ற காவியத்தில் ஆக்கஎழும் ஆவலினாற் பாட்டெழுத ஏடெடுத்தேன் அவ்வேளை, குன்றக் குறமகளோ? கோலக் கடலலைகள் நின்றலையும் நெய்தல் நிலமகளோ? ஆர்கலிசூழ் தண்மருதப் பெண்மகளோ? தாவுங் கொடிமுல்லைக் கண்மருவும் ஆரணங்கோ? கண்டறியேன் ஆரணங்கோ! கட்டழகுப் பெட்டகமாய்க் கண்கவருங் காரிகையாய்ப் பொட்டழகுங் கார்கூந்தற் கட்டழகுங் கொண்டவளாய் வஞ்சி ஒருத்தியங்கு வந்தருகில் நின்றெனது நெஞ்சி லிடங்கொண்டாள் நின்றவளை நான்கண்டேன்; கொஞ்சுங் கிளிமொழியாள்,கொவ்வைச்செவ் வாயிதழாள், விஞ்சும் எழில்கூட்டும் வேல்விழியாள், அன்னத்தை அஞ்சவைக்கும் மென்னடையாள், ஆடும் மயிலினத்தைக் கெஞ்சவைத்த சாயலினாள் என்னைக் கிரங்கவைத்தாள்: அன்னவளை இன்பமிகும் என்னவளைக் கையிரண்டும் மின்னவளை பூண்டவளை என்னுளத்தை ஆண்டவளை மாலை புனைந்து மணங்கொள்ள நான்நினைந்து சேலை நிகர்த்தவிழிச் சிற்றிடையாள் காதலையே நாடோறும் பாடி நலந்துய்க்க வேண்டுமெனுஞ் சூடேறி ஏடெடுத்துச் சொற்றமிழிற் பாட்டெழுதிக் கொட்டிக் குவித்தேன், குலமனைவி காதலையும் மட்டுப் படுத்தும் மனநிலையைத் தந்துவிட்டாள்; பிள்ளைக் கனியமுது பெற்றெடுத்தாள் ஆதலினால்