பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் G17.2 கவியரசர் முடியரசகன பாடித் தெருவலையும் பாடகியைப் போல்விளங்கக், கோலக் கருவானங் கூத்தன் விரித்துவைத்த நீலத் துகில்போல நின்றங்குக் காட்சிதரக், கண்டு களித்தோர் கையால் விசிறிவிட்ட மண்டுவெள்ளிக் காசுகள்போல் வான்வெள்ளிக் கூட்டங்கள் மின்னிக் கிடக்கஎழில் மேல்வானிற் கண்டிருந்தேன் என்னைத் தொடர்ந்துவரும் இன்பத்தை என்னென்பேன்! தேர்போகுங் காட்சியெனச் சேர்ந்தொன்றாய் ஊர்ந்துவரும் கார்மேகக் கூட்டங் கனத்த மழைபொழியத் தோகை, மயிலானேன் துள்ளும் மனத்தகத்தே ஒகை மிகவாகி ஒவென்று கூவிக் குளித்தேன் அதனால் குதித்தேன் அகத்தே களித்தேன் அதுதான் கணக்கில் அடங்காது; . நீரால் நனைந்தமையால் நெஞ்சம் மிகக்குளிர்ந்தேன்; ஆரா இனிமைதரும் அவ்வுலகில் நின்றபடி நீணிலத்தை நோக்க நினைந்தேன் அடடாஒ காணலுற்ற காட்சியினாற் கண்ணின் பயன்பெற்றேன்! ; பச்சைப் பசுங்கொண்டல் பாவிவரும் நீள்முகட் டுச்சிப் பனிமலைகள், ஒங்கு பெருவிலங்கல், தாவிக் குதித்துத் தடம்புரளும் வெள்ளருவி மே.வித் திரண்டுருண்டு மேதினியில் ஒடிவந்து குன்றா வளஞ்சுரந்து கோலங்கள் செய்துவரும் பொன்றாப் புனலாறு, பூமகளைப் போர்த்திருக்கும் பட்டாடை என்னப் படர்ந்திருக்கும் நெற்கழனி, முட்டாது தேன்சுரக்கும் மொய்ம்மலர்சூழ் பூஞ்சோலை, சோலைக் கனிகொறிக்கத் துள்ளும் அணிற் கூட்டம்,