பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம். G20.) - கவியரசர் முடியரசன் ஏனோ எனமயங்கி ஏங்கிக் களைத்திருந்தேன்; ஒன்றென் மனத்தே உருவாகக் கண்டுணர்ந்தேன் என்றும் நிலைக்கும் எழில்மேவுங் காப்பியமே ஒன்று படைக்க உளங்கொண்டேன் ஏடெடுத்தேன் அன்றுகடன் காரர் அனைவருமே வந்துநின்றார் ; ஒன்றும் புரியவிலை ஒர்வரியும் ஒடவிலை என்று தொலையுமடா இக்கடன்கள் என்றுழன்றேன்; ஆங்கே ஒருத்தி அரியகுரல் தந்துநின்றாள் 'ஈங்கே வறுமை இருக்கும்வரை காப்பியமோ? ஏழைஎனA செல்வரென எத்தரெனப் பித்தரெனப் பாழும் உலகிற் படைத்துவைத்த தீங்குகளும், தாழ்ச்சி உயர்ச்சி தகுபிறப்பில் உண்டென்று சூழ்ச்சித் திறனுடையார் சொல்லிவரும் நீதிகளும், ஒயாமல் என்றும் உழைப்போரும் அவ்வுழைப்பாற் சாயாமல் நின்று சதிசெய்து வாழ்வோரும் இன்றும் இருப்பதற்கே எண்ணும் மடமைகளும் கொன்று குவிப்பதற்கே கூர்வாள்போல் ஏடெடுத்துப் பாட்டெழுத வேண்டுமடா பாடுந் தமிழ்மகனே வேட்டெழுந்து பாவரைந்தால் வெங்கொடுமை மாளுமடா, நாட்டைக் களமாக்கி வேட்டைத் தொழில்புரிந்த கூட்டத்தார் செய்யுங் கொடுமைஎலாம் போய்மறைய மண்ணோடு மண்ணாய் மடிந்துவிடப் பாட்டெழுது! கண்ணாக எண்ணிக் கடமைசெயுந் தொண்டர்களை ஆளும் பொறுப்பில் அமர்த்தி அவர்கையில் & நாளுமுயர் ೧ಕಸೀಹಸು 5-55 கொடுத்துவிடு,