பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் S212 கவியரசர் முடியரசன் நல்லாட்சி செய்கின்ற நல்லவர்க்குத் தென்பூட்டச் சொல்லாட்சி செய்யுந் தொழிலோனே பாட்டெழுது, செந்தமிழ்க்குத் தீங்குவரின் சீற்றமொடு பாட்டெழுது, நொந்தவர்க்கு வாழ்வுதர நூறுவகைப் பாட்டெழுது, மக்களுக்கு வேண்டும் மனவளத்தைப் பாடுகநீ, தக்க மனவளத்தைத் தக்கவைக்கப் பாட்டெழுது, % l சாண்வழிப் பாட்டுக்குத் தக்கபடி பாட்டெழுதி மாண்பழித்துக் கொள்கைகளை மாற்றியிங்குப் பாடாதே, புத்தம் புதுவுலகம் பூத்து மலர்ந்திடவும் தத்தங் கடமைகளைத் தாழ்வின்றி ஆற்றிடவும் ஏழைமை நீங்கிடவும் இன்னல் தவிர்ந்திடவும் தோழமை எங்குந் தொடர்ந்துலகம் ஓங்கிடவும் எங்கள் தமிழொன்றே ஈங்கரசு செய்திடவும் பொங்கும் முரசொலிக்கப் பூரித்த தோளுயர்த்திப் பாடடா ஏடெடுத்துப் பாரடா ஏறெடுத்து, நாடடா ஈதுனது நாடடா பாடடா, பாடும்போ துன்னைப் பகைப்பவர்தாம் யாரடா? ஒடும்இனம் அல்லோம் உருத்தெழுந்தாற் போரடா! போரெடுத்தால் எப்பகையும் போய்மடியும் ஈங்குன்னை யார்தடுக்க வல்லார்? எழுந்திங்கு நின்கருத்தைப் பாடடா பாடென்று பாவை உரைத்ததனால் ஏடெடுத்தேன் பாட்டெழுத இன்று. முத்தமிழ் இலக்கிய மன்றம் திருக்கழுக்குன்றம் 25.4.1967. *