பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்கள் மாறிடலாம்; ஒரு நாள் கண்ட கருத்துகளும் மாறிடலாம்; பூண்டு கொண்ட கோலங்கள் மாறிடலாம்; சட்டம் கூறும் கொள்கைகளும் மாறிடலாம்; வாழும் இந்த ஞாலங்கள் மாறிடலாம்; வாழ்ந்து வந்த நாகரிகம் மாறிடலாம். மானம் மற்றும் சீலங்கள் மாறிடுமேல் சீசீ என்ற சிறுமைக்கே ஆட்படுவாய் சீரிழந்தே. ஆடைகளை மாற்றுகிறாய்; முடியைக் கூட அருவருக்க மாற்றுகிறாய்; பேசுகின்ற 左 மேடைகளை மாற்றுகிறாய் வீரங் காட்டும் மீசையினை மாற்றுகிறாய்; தொலைந்து போபோ கோடையினைக் குளிர்ச்சிதரும் பருவ மென்று குலவுகின்ற தமிழ்மகனே உன்னி னந்தான் வாடுவதை மாற்றுகிற உணர்வே யின்றி மயக்கத்திற் சிக்குண்டு திரிகின்றாயே.