பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் ৫৪৯ கவியரசர் முடியரசன் உரிமைநமக் கெய்தியதால் இனிமேல் வாழ்க்கை உயர்ந்துவிடும் வளம்பெருகும் கவலை யில்லை சரிநிகராய் வாழ்ந்திடுவோம் உயர்வு தாழ்வு சாதியிலும் பொருள்தனிலும் எதிலும் இல்லை அரசியலும் நடுநின்று பொதுமை பேணும் அடிமைமிடி இலையென்றே கனவு கண்டார்; | புரியகிலாப் பகற்கனவாய்ப் போன தாலே பொங்கியவர் விழிகளெலாம் செந்தி செந்தீ. சோறுபெறாக் காரணத்தால் வயிறு பற்றிச் சுடர்த்தெழுந்த பசித்தீயும் ஆள வந்தார் ஊறுபெறச் செந்தமிழை அழிக்க வேண்டி உன்னுவதால் உருத்தெழுந்த உள்ளத்தீயும் மாறுபடும் ஆட்சியினால் அல்ல லுற்ற வறியவர்தம் விழித்தீயும் கொடுங்கோல் தன்னை நீறுபடச் செய்யட்டும் செங்கோ லாட்சி நிலவட்டும் பரவட்டும் அந்த முத்தீ.