பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீ பரவட்டும் வயலிருந்தும் வயல்பாய நீரி ருந்தும் வருந்தாமல் நீர்பாய்ச்சி உழைக்கும் நல்ல செயலிருந்தும் அச்செயலால் விளைவி ருந்தும் சேர்த்துவைத்த நெல்முதலாப் பொருளி ருந்தும் மயலுறவும் செயலறவும் மாந்தர் வாடி வாயுண்வுக் கின்னலுறச் செயற்கைப் பஞ்சம் புயலெனவே புகுந்ததனால் அவர்வ யிற்றிற் பொங்கியெழுந் தெரிந்ததுவே பசித்தீ பற்றி, வெள்ளையனும் நமக்குரிமை தந்து விட்டு வெளிப்போந்தான் ஆதலினால் ஆங்கி லத்தால் எள்ளளவும் செந்தமிழ்க்குத் தீத்மை யில்லை இனியதமிழ் அரியணையில் அமரும் என்றே உள்ளமதிற் பொங்கிஎழும் ஆர்வங் கொண்டோம்; ஒற்றுமையாம் பொதுமொழியாம் என்று கூறிப் பிள்ளைமதி படைத்தவரோ இந்தி ஒன்றே பேணுகிறார் எரிமலைபோல் வெடித்த துள்ளம்