பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் (36) கவியரசர் முடியரசன் துன்பத்தில் நெஞ்சங்கள் துடிப்ப துண்டு தொடர்கின்ற இன்பத்தும் துடிப்ப துண்டு துன்பத்தின் துடிப்பாலே புரட்சி தோன்றும்; துடிக்கின்ற இன்பத்தில் மருட்சி தோன்றும்; துன்புற்று மக்களினம் துடித்தால் எங்கும் துவள்கின்ற நெஞ்சத்தில் நெருப்பு மூளும் மின்பற்றி விளையாடும் வாளும் வேலும் மிடைந்திருக்கும் ஆட்சிகளும் எரிந்து வீழும். தன்மனையின் காற்சிலம்பை விற்க வந்த தப்பறியாக் கோவலனைக் கள்வன் என்றான்; பொன்செய்யும் கொல்லனுரை நம்பி நின்றான்; புகழ்க்கருணை மறவனுக்குத் தீங்கு செய்தான்; பொன்செய்யும் வேலுடையான் பாண்டி மன்னன் புகார்விட்டு வந்தான்மேல் புகாரு ரைத்தான் என்னுமொழி செவிப்படலும் கண்ண கித்தாய் இடர்ப்பட்டாள் கொதித்தெழுந்தாள் கனலாய் நின்றாள். 'குறையில்லாக் கோவலனோ கள்வன்? என்றன் கொழுநனுக்கோ வீண்பழிகள்? சொல்வார் பேச்சைச் சரியென்று நம்புவதோ அரச நீதி சமன்செய்யும் கோல்போல நடுநின் றோராக் குறைமதியன் நாடாளும் மன்ன னோ?இக் கொடுமைக்கே சாவுமணி அடிப்பேன்’ என்றே எரிகின்ற நெஞ்சத்தே துடிதுடித்தாள் இருந்தஇடத் தெரியாமல் சாய்ந்த தாட்சி. (13.5.1978) - o