பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்நாள் எந்நாள்? வியப்புமிகுங் கலைத்திறமை கொண்டி லங்கும் வியன்கோவில் எடுப்பித்தான் இராச ராசன், நயத்தக்கான் திருவுருவைச் சிலையில் ஆக்கி நனிவிருப்பால் அச்சிலையைக் கோவி லுக்குள் அயற்புறத்தே சுவரெடுத்து வைக்க எண்ணி அருமுயற்சி மேற்கொண்டார் முடிய வில்லை; மயக்கநிலை தெளியவில்லை; அடிமை இன்னும் மாறவில்லை உரிமைபெறும் அந்நாள் எந்நாள்? பொன்னிவளக் கரையுடையான் தஞ்சைப் பேரூர் பொலிவுபெறப் பெருங்கோவில் ஒன்ற மைத்தான்; அன்னதிருக் கோவில்நலம் புரந்து காக்கும் ஆளுரிமை கங்கைக்கே உரிய தென்றால் என்னமுறை பீதென்று துணிந்து கேட்க, எல்துடைமை எமக்கென்றே உரிமை கோர இன்னுமுணர் வெழுவில்லை தமிழர்க் கந்தோ! எப்பொழுது விழிப்பாரோ? அந்நாள் எந்நாள்?