பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் GA22 கவியரசர் முடியரசன் அழல்வடிவக் கடவுளுக்குக் கோவில் ஆக்கி, அவன்செவியில் தேவார ஒலியைக் கூட்டி நிழல்படியாக் கோபுரமும் கட்டி வைத்து, நெடுந்தெருவில் நிற்கின்றான் இராச ராசன், நிழல்கொடுக்கும் வெண்குடைக்கீழ் உலகம் ஆண்டான், நிற்கின்றான் குடையின்றித் தஞ்சை மண்ணில்; அழிதருமிச் செயல்திரத் தமிழர் இங்கே ஆர்த்தெழும்நாள் எந்நாளோ? அந்நாள் எந்நாள்? நன்றுபடாச் சமயங்கள், பிரிவு கொண்ட நாலுவகை வருணங்கள், அவற்றுட் சாதி என்றுபல ஆயிரங்கள், பகைமை கொண்டே இயங்கிவரும் பலகட்சி இவற்றுட் சிக்கி ஒன்றுபடாத் தமிழ்நாடே நீதான் இங்கே உருப்படுமோர் நாள்வருமா? அந்நாள் எந்நாள்? தொன்றுமுதிர் தமிழினமே அடிமை தீரத் துணிந்தொன்றாய்க் -Boi அந்நாள் எந்நாள்? όν