பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் G44) கவியரசர் முடியரசன் அறப்போர் எத்தனை ஆற்றினை! இதனை மறப்பார் உளரோ? மறுப்பார் உளரோ? உளத்தெழும் உணர்வால் ஒவ்வொரு போரிலும் களப்பலி யாகக் காளையர் உயிர்கள் எத்தனை எத்தனை ஈந்தனர் உவந்தே அத்தனை உயிரும் எவர்தம் உயிராம்? உன்னுடன் பிறந்தார் உன்னலம் நினைந்தார் தம்முயிர் அன்றோ? தமிழ்நலங் காக்க -- எரியிடைப் புகுந்துடல் கருகிட மடிந்தனர் அரிநிகர் தோழர் அவரெலாம் உன்னினம்! கொடுஞ்சிறைக் கோட்டம் இடஞ்சிறி தாகப் புகுந்தது நிறைந்தது புலிநிகர் கூட்டம்! முந்திய போர்களிற் சிந்திய குருதிகள் சிந்தைக் கல்லிற் செதுக்கிய வரிகள் வரலாற் றேட்டில் வாழ்வன காணுதி அரியேற்றுள்ளம் அவற்றால் வாய்த்திடும் அழியா வரிகளை அடிக்கடி படித்திடு விழிபோல் அவற்றை விரும்பிப் போற்றிடு! பழகிய தமிழ்மொழி பழுதுறா தோங்கிட இளகிய தமிழினம் இணையிலா திலங்கிடக் கழகம் ஒன்றே காத்திட வல்லது கழகம் காத்திடல் காளையே நின்கடன் பாசறை அமைத்ததில் பயின்றிடு போர்முறை