பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் Q56) கவியரசர் முடியரசன் w) ஒரு மொழியால் உலகாண்டார் பண்டை வேந்தர் உறவாடி வருமொழிக்கும் இடம ளித்தார்; இருமொழியால் உலகாளச் சட்டம் செய்த தென்னரசு தமிழரசு, நமது நாட்டின் கருவிழியாய்/ உயிர்மொழியாய்த் துறைகள் தோறும் காணுமொழி தமிழொன்றாம்; மற்றும் ஒன்று வருமொழிதான் துணைமொழிதான் தமிழைத் தாழ்த்த வருமொழிக்கிங் கொருநாளும் இடமே ഥിങ്ങ്. காருந்தும் பனிமலையை வெற்றி கொண்டு கயல்புலிவில் இலச்சினையைப் பொறித்தார் முன்னோர் ஊரெங்கும் நிகழ்ந்தபொதுத் தேர்தல் நாளில் உரைகாண முடியாத வெற்றி கண்டு, பேருந்து வண்டிகளில் குறள்பொறித்துப் பெருநெறியில் குறள்நெறியைக் காட்டுகின்ற சீருண்டு தமிழகத்தின் அரசுக் கென்றால் சிதறுண்டு போனவர்கள் குறையும் சொல்வார். பாரெங்கும் படைகொண்டு சென்றார் அன்று பண்புடைய தமிழ்கொண்டு செல்வார் இன்று; பாரெங்கும் பெருவெற்றிக் களிய டைத்தார் பண்டிருந்த மூவேந்தர் ஒளிய டைத்தார்: பாரெங்கும் நானுற்றுத் தமிழ்ப டைத்துப் பைந்தமிழ் அரசிங்கே ஒளிய டைக்கும்; பாரெங்கும் தமிழினத்தின் பண்பைக் காட்டப் பரசு தமிழ் மாநாடு நடத்திக் காட்டும்.