பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் G8D கவியரசர் முடியரசன் மாரிக்கு நிகராகப் பொருளை வாரி வழங்கியருள் வள்ளல்பலர் ஆண்டார் அந்நாள்; ஊருக்கு நலஞ்செய்யும் தொண்டர், இந்நாள் ஊராள வந்தமையால் வள்ளல் அல்லர்; ஆருக்கும் ஈவதற்குச் செல்வர் அல்லர்; ஆனாலும் தமிழரசில் எளிய வர்க்குப் பாரிக்கு நிகராக வாழ்வு நல்கும் பண்பாட்டைக் காக்கின்ற பண்பும் உண்டு. களைத்திருந்த புலவனுக்கு முன்னே நின்று கவரியினால் மெல்லனவே வீசி, நெஞ்சம் களித்திருந்த மேலவனைப், புலவர்ப் போற்றும் காவலனை, முடியரசில் அன்று கண்டோம்; இளைத்திருக்கும் தமிழ்த்தாயின் வாட்டம் நீங்க, இனியதமிழ்ப் புலவர்சிலை கடலின் ஒரம் நிலைத்திருக்க,ஆழிஅலைக் கையால் வீச நிற்பதைநாம் தமிழரசில் இன்று கண்டோம். படைவலியால் வடபுலத்தை அன்றை வேந்தர் பகையாக்கிப் பணிவித்தார்; இன்றோ பேச்சு நடைவலியால் நட்பாக்கிப் பணிய வைக்கும் நாவன்மை கொண்டிலங்கக் காணு கின்றோம்; குடையுடைய மூவேந்தர் iரம் ஒன்றே தி குறியாக மறங்காட்டி வந்தார் அந்நாள்; நடையுடைய நாவேந்தர், கொள்கை ஒன்றே நடுவாகத் திறங்காட்டி வந்தார் இந்நாள்.