பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் இ2 கவியரசர் முடியரசண் |* மாரிவளங் குன்றியக்கால் வான்பேர் அச்சம், மக்களுக்கோர் இன்னல்வரின் பெரும்பேர் அச்சம், பாரிதனைக் காக்கின்ற குடிப்பி றத்தல் படுதுயரம் எனநினைந்து காத்தார்.அன்று; மாறியது /பருவமழை, அதனால் எங்கும் வறட்சிநிலை பரவியது கண்டு நெஞ்சில் ஊறிவரும் பரிவுடனே ஒடி ஒடி உறுதுயரம் துடைப்பதற்கு முனைந்தார் இன்று. முன்னாளில் தமிழ்நாடு பொதுமை யின்றி முடியரசாய்த் தனியரசாய் விளங்கக் கண்டோம்; இந்நாளில் குடியரசாய் மலர்ந்த தேனும் எடுப்பார்கைப் பிள்ளையென நிற்கக் கண்டோம், தன்னாட்சி செய்கின்ற உரிமை யின்றித், தாவென்று நடுவரசைக் கேட்டுவாங்க அன்னார்பின் திரிகின்ற நிலையே கண்டோம்; அதிகாரம் இல்லாத அரசே பெற்றோம். நடுவரசில் அதிகாரம் குவிந்த போதும் நாகரிக அரசியலைச் சொல்லிக் காட்டிக் கொடுவரிமை என்றுரத்த குரல்கொ டுக்கும்; கூடிமகிழ் உறவுக்குக் கைகொ டுக்கும்; கெடுதலையாய்ப் போராடும் உள்ளம் இல்லை; கிளந்துரைத்து வாதாடும் நெஞ்சம் உண்டு; விடுதலைக்குக் கேடுசெய்ய பன்கைகள் வந்தால் வீறுடனே சீறிஎழும் நாடு காக்கும்.