பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் GoD கவியரசர் முடியரசண் *" = - எளியரென வலியரென இன்னும் இங்கே இருக்கின்ற நிலையொழிக்கும் பணியில் நிற்கும்; துளியளவும் வன்முறையை நாட லின்றித் தோழுமையால் பொதுவுடைமை பூக்கச் செய்யும்; இழிவுடைய உயர்வுடைய சாதி என்னும் இறுமாப்புக் கொள்கைகளைச் சுட்டெ ரிக்கும்; தெளிவுடைய அறிவினராய் மாந்தர் எல்லாம் திருவினராய்ச் சரிநிகராய் வாழச் செய்யும் யானைகட்டிப் போராடித்து விளைச்சல் கண்டு யாவருக்கும் நெல்லாந்த தமிழர் நாட்டில் பானைகட்டிப் போரடிக்க வந்த பேர்க்கும் படியரிசி யளப்பதற்கு முயலும் போது மோனைகட்டி எதுகையிட்டுக் கவிதை யாத்து முழுமனத்தாற் பாராட்ட மனமே யில்லார் சேனைகட்டி எதிர்க்கின்றார்; சிறுமை யன்றோ? & ೧5569) நாட்டுக்கு நன்மை யாமோ? - (பாரிவிழா, பறம்புமலை) (28.4.1969)